There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்பதற்கு ஏற்ற ஒரு சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவுவதற்கு முதலில் முயலுங்கள். இந்த வெற்றியானது வெளியில் நீங்கள் போகின்ற இடங்களிலெல்லாம் இனிமை தருகின்ற அலைகளாகப் பயன் தரும்.
கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் நிலவுவதற்கு உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவானது உங்கள் வாழ்வில் மட்டுமின்றி, உங்களது குழந்தைகளுடைய வாழ்விலும் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசிக் கொண்டிருங்கள். அதைப் பார்க்கின்ற குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்பு தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயர இதுவே வழி.
குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்புக் குறைவாகப் பேசுவதோ, இழிவுபடுத்திப் பேசுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.
தன்னடக்கமும், பிறரை மதிக்கின்ற பண்பாடும் இல்லாத தம்பதிகள், ஒழுக்கமும் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கட்செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பல பயக்கவல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும் என்பதைத் தம்பதியினர் உணர வேண்டும்.
வாழ்க்கையில் நன்மைகளையெல்லாம் அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அது நல்ல விருப்பம் தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? குடும்ப அமைதி உட்பட, என்ன நலன் வேண்டுமோ, அந்த நலனைப் பெற ஏற்ற செயல்களைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்ற வேண்டும். விளைவு நிச்சயம். உங்களுடன் குருமகான் வேதாத்திரி மகரிஷி இருப்பதை உணருங்கள். நீங்கள் நிச்சயமாக வெற்றி பெற அவ்வுணர்வு அவசியம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இவர்கள் இருவரை வைத்து தான் அவர்களின் குடும்ப வாழ்க்கை நகர்ந்து செல்லும். இதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் அக்கறையுடன் இருக்கவேண்டும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு கணவன் மனைவி இருவரும் நல்ல மன ஒற்றுமையுடன் நடந்து கொண்டால் அவர்களின் வாழ்வு சுகமாக அமையும்.
குடும்பத்தில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும் வேதாத்திரி மகரிஷி கூறிய உன்னதமான கருத்துக்கள்:
1. நானே பெரியவன். நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடவேண்டும்.
2. அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. (loose talks).
3. எந்த விஷயத்தையும், பிரச்சனையையும், நாசூக்காக கையாள வேண்டும். (Diplomacy), விட்டுக் கொடுக்க வேண்டும். (compromise)
4 . சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான் ஆகவேண்டும். (Tolerance)
5. நாம் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடக் கூடாது. (Adamant Argument)
குறுகிய மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.(Narrow Mindedness)
6. உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் ,
அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விட்டு விட வேண்டும்.(Carrying tales)
7. மற்றவர்களை விட நம்மை எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப் படக் கூடாது. (Superiority Complex)
8. அளவுக்கு அதிகமாய் ,தேவைக்கு அதிகமாய் ஆசைப் படக் கூடாது.(Over Expectation)
9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களின் சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது.
10 கேள்விப் படுகின்ற எல்லா விஷயங்களையும் நம்பி விடக் கூடாது.
11 அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தக் கூடாது.
12 நம் கருத்துகளில் உடும்பு பிடியாக இல்லாமல், மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
13 மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இதமான அன்புச் சொற்களை பேசவும்,அடக்கமும் பண்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
14 பிரச்சினைகள் வரும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்,நாமே மனம் திறந்து பேசவேண்டும்.
PHONE: +91 7904402887 / 04253-292746