There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
முதல் பகுதியின் தொடர்ச்சி....https://www.kundaliniyoga.edu.in/blog/Kudumbathil-Pengalin-Nilai-Uyara-Vendum
தற்காலத்தில் வாணிபம், தொழில், அரசியல், நிர்வாகம் என்று எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குச் சம பொறுப்பு ஏற்பட்டுவிட்டது. ஆயினும், பழைய ஏற்பாடுகளும், அவ்வக்காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களும் இன்னும் சில இடங்களில் தொடர்ந்து வருவதைப் பார்க்கின்றோம். இது காலத்திற்கு ஒவ்வாதது.
இன்றைய சமுதாய வாழ்க்கையில் அதன் பெருமையையும் பொறுப்பையும் உணராதவர்கள் திருமணம் என்பது ‘ஆணைப் பெண்ணோ, பெண்ணை ஆணோ விருப்பம் போல் துன்புறுத்தி வாழலாம், அதற்கேற்ற உரிமை ஒப்பந்தம் (License) தான் திருமணம் என்ற நிலை பொதுவாக எங்கும் பரவி இருக்கிறது. இதன் காரணமாக மனித வாழ்க்கையில், எத்தனைத் துன்பங்கள் நிலவுகின்றன என்பதைப் பார்ப்போம்.
வரதட்சணை என்ற கொடுமையினாலும், குடும்பங்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் ஏற்படுகின்ற விவாகரத்துகளாலும், கணவன் மனைவிகளாக வாழ்வோரும், அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகளும், தம்பதிகளின் பெற்றோர்களும் அடைகின்ற துன்பங்களை விளக்கிச் சொல்ல முடியாது.
பெண்களின் மதிப்பைப் பெண்களும் உணர வேண்டும்
எத்தகைய சட்டங்கள் போட்டாலும் அதன் மூலம் கணவன் - மனைவி உறவிலே நல்லதோர் இனிமையை வளர்த்துவிட முடியாது. ஆண்களும், பெண்களும் ஒருவர் மதிப்பை இன்னொருவர் உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு ஒத்தும் உதவியும் வாழ வேண்டும். இந்த நிலைமை சமுதாயத்தில் பண்பாடாக வளர்வதற்குப் பெண்ணின் பெருமையையும் இயற்கையாக அவர்கிடம் அமைந்துள்ள மதிப்புகளையும் ஆண்களும், பெண்களும் உணர வேண்டும்.
அதற்குப் பெண்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள உடலமைப்பு, அறிவின் இயல்பு இவற்றிற்கேற்ப, வாழ்க்கையில் உள்ள தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் பெண்கள் உணர வேண்டும். ஆண்களும் பெண்மையின் பெருமதிப்பை உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு தங்களது செயல்களையும், மனநிலைகளையும் உயர்த்திப் பொருத்திக் கொள்ள வேண்டும். ஆண், பெண் இருவர்களில் பெண்மையின் மதிப்பை உணர வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கே இக்காலத்தில் அதிகமாக உள்ளது.
பெண்ணினத்தினுடைய பெருமையை உணர்வதற்குச் சில உண்மைகளையும், இயற்கை நியதிகளையும் நன்றாக உணர வேண்டும். எந்தச் சமுதாயமானாலும் ஆண்கள் பாதி, பெண்கள் பாதி என்று பொதுவாகக் கணக்குப் போடுகிறோம். அந்தப் பாதி ஜனத் தொகையான ஆண்கள் அனைவருமே பெண்களால் பெற்றெடுக்கப்பட்டவர்கள் தான்.
எந்த ஜீவராசியானாலும் பெண் வயிற்றிலுருவாகி, அந்தப் பெண்ணின் உடலில் ஓடுகின்ற இரத்தத்தையே தனது உடலுக்கு வேண்டிய ஏழு தாதுக்களாக மாற்றிக் கொண்டு, பிறந்த பின்னும் அந்தப் பெண் என்ற தாயின் பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் வாழ்ந்து வருகின்ற உண்மையினைச் சிந்தித்து உணர்ந்து, அதற்கு ஒத்த நன்றியுணர்வோடு ஆண்கள், பெண்கள் இருவருமே பெண்ணின் பெருமையை உணர்ந்து வாழ வேண்டும்.
ஆண்களுக்கும், பொதுவாக மனித இனத்திற்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்கள், வளங்கள் அனைத்துமே பெண்கள் மூலமாகக் கிடைப்பதையும், அதன் மூலம் சமுதாயமே தொடர்ந்து நலம் பெற்று வாழ்வதையும் விளக்கிக் கூற வேண்டியது இல்லை.
பெண்ணினத்தின் பெருமையை உணர்ந்து, மனித குலத்தின் பண்பாட்டை உயர்த்த வேண்டுமென நினைக்கின்ற சிந்தனையாளர்கள் எல்லாம் ஆட்சி முறையைக் கூட சீர்திருத்த வழி காண வேண்டும்.
PHONE: +91 7904402887 / 04253-292746