There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
ஆண் பெண் உறவு மிகவும் மதிப்புடையதாக இருக்கிறது. எனினும் ஆண்களை விடப் பெண்கள் இன்று குறைந்த மதிப்புடையவர்களாக வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டுமின்றி, அரசியல் கண்ணோட்டத்திலும் பிற்படுத்தப்பட்டுள்ளார்கள். இயற்கையாக அவர்களுக்கு இருக்க வேண்டிய மதிப்பை ஆண்களும் அவர்களுக்கு அளிக்கவில்லை. மாறாகப் பறிக்கின்றனர்.
மனிதகுல வாழ்வில் சரிபாதியாக அங்கமும், பொறுப்பும் வகிக்கின்ற பெண்கள் இவ்வாறு உதாசீனப்படுத்தப்பட்டார்களானால், மனிதகுலம் எவ்வாறு நிறைவான மகிழ்ச்சியை அடைந்து வாழ முடியும்? இந்நிலை உலக நாடுகள் முழுவதுமே காணப்படுகிறது. முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படுகின்ற நாடுகளில் கூடப் பெண்ணினத்தை இழிவாகவே நடத்துகின்ற அநாகரிகம் காணப்படுகிறது.
வேதாத்திரி மகரிஷி உலகின் பல நாடுகளிலும் அருட்பயணம் மேற்கொண்டு கண்ட இவ்வுண்மை என் மனதில் சொல்லாணாத வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எப்படி மனிதகுலம் முழுவதையும் நாம் மேம்படுத்த முடியும்? அதில் சரிபாதியானது (ஆணினம்) இன்னொரு பாதியை (பெண்ணினத்தை)த் துன்புறுத்திக் கொண்டிருக்கிறதே! வாழ்வின் ஒவ்வொரு சாராரையும் பெருமைப்படுத்தி நன்றி பாராட்டுகின்ற நல்ல பழக்கத்தை மனிதகுலம் மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு நல்ல நிலை தான்.
அவ்வகையில்,
1. தன் கணவனுடைய ஆதரவைத் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணானவள் பெற்று மகிழ வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் சுமங்கலி நோன்பு கொண்டாடுகிறார்கள்.
2. குழந்தைகள் எதிர்கால சமுதாயத்தினர் என்று அவர்களைச் சிறப்பிக்க குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம்.
3. தாய்மையின் உயர்வைப் போற்ற அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
4. அதேபோல், தந்தையர் தினம் என்றும் ஒன்று வருகிறது. 5. காதலர் தினம் என்று ஒன்றும் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், ஆண் மகனின் வாழ்வை வளப்படுத்துவதற்காகத் தன் ஊரை, வீட்டை பெற்றோரை விட்டுவிட்டு வந்து கணவன் வீடு சேருகின்ற மனைவிக்கு – மீதி வாழ்நாளெல்லாம் அந்த ஆணுடைய உயர்வுக்கு தன்னை ஒப்படைத்து கொள்ளும் பெண் நல்லாளுக்கு – ஒருதினம் ஒதுக்கப்படவில்லையே! குடும்ப வாழ்வுக்கு மதிப்பு தருகின்ற நம் நாட்டிலும் கூட இல்லையே. கற்பின் மேன்மையைப் போற்றுகின்ற நம் நாட்டில் கூட இல்லை என்பது ஒரு மேன்மையான நிலையா?
இன்று உலகத்தில் எத்தனை கோடி பேர் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பெற்றெடுத்த அன்னையர் ஓர் ஆண்மகனுக்கு மனைவி என்ற முறையில் கடமை ஆற்றுகின்ற சந்தர்ப்பத்தால் தானே தாயானாள்? அப்படிப்பட்ட மனைவியைப் போற்றுவதற்காக ஒரு தினம் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே நமது மனவளக்கலையில் ஆகஸ்ட்30ஐ ஒதுக்கியுள்ளோம். அது அருளன்னை லோகாம்பாள் பிறந்த நாள். அந்த நாளை அனைவரும் மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடி வருகின்றோம். உலகம் முழுவதற்கும் இந்த வகையில் ஒரு விழிப்புணர்வு தோன்றுகின்ற நாளை எதிர்பார்ப்போம். அன்றைக்குத் தான் பெண்மையின் மதிப்பை மனிதகுலம் - ஆடவர் இனம் - உணர்ந்த தினமாக அமையும்.
PHONE: +91 7904402887 / 04253-292746