There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
சமீபத்தில் மக்களிடேயே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு கலை “யோகா “ என்றே சொல்லலாம். யோகாவின் பயன்பாடு என்ன என்பதை இன்று உலகமே உற்று நோக்கி, தங்கள் வாழ்வில் மேன்மையடைய யோகா செய்கின்றனர். வேதாத்திரி மகரிஷி கூறும் வாழ்வை முழுமையாக்கும் யோகக் கலையில் அவர் கூறியுள்ள கருத்துக்களை இப்பகுதியில் ஆராய்வோம். Cognition என்றால் என்ன? நாம் ஒளியைப் பார்க்கிறோம். அதனுடைய தன்மை என்ன? எந்த அளவினதாக அது இருக்கிறது? எவ்வளவு தூரத்திலிருந்து வருகிறது? என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். அது Cognition. அதோடு கண்ணால் அதைப் பார்ப்பதனால், நம்முடைய உயிராற்றல் அதோடு தொடர்பு கொள்ளும் போது, ஏற்படக்கூடிய அதிர்வினால், உயர் அதிர்வினால், ஒளியாக, கண்ணுக்கு இன்பமோ, துன்பமோ ஏற்படும். அதுபோல நம் உயிருக்கு நிறைவு அல்லது குறைவு ஏற்படும். இவைகள் எல்லாம் அனுபவம் (Experience).
நேற்று பார்த்ததற்கும் இன்றைக்குப் பார்த்ததற்கும் உள்ள வித்தியாசத்தை, அல்லது இரண்டு பொருட்களைச் சேர்த்துப் பார்க்கின்ற போது ஒன்றுக்கு ஒன்று உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்வது - இது தான் Discrimination. எந்தப் பொருளை நாம் பார்க்கின்றோமோ, அதுவாகவே நாம் மாறுகின்றோம். எந்தப் பொருளை நாம் பார்த்துக் கொண்டோ அல்லது அனுபவித்துக் கொண்டோ இருக்கின்றோமோ, அந்த ஒவ்வொரு அனுபவமும் பதிவாகி, பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. அந்தப் பதிவுகள் எங்கே ஏற்படுகின்றன?
நம்முடைய உயிராற்றல் என்ற நுண்துகளுக்கு உள்ளாக கம்ப்யூட்டரில் பதிவாவது போல் அந்தப் பதிவுகள் அமைகின்றன. அங்கிருந்து வரக்கூடிய அலையில் தானாகப் பிரதிபலிப்பு ஆகும். அல்லது நாமாக யோசித்து என்ன செய்தோம் என்று ஆராயும் போது அந்த recordஐ எடுக்கலாம். அதை நினைவாற்றல் என்று சொல்கிறோம். எண்ணம் என்று சொல்கிறோம்.
இந்த விதமாக மனிதனுக்கு Spiritual Consciousness உள்ளது. “Spirit” என்றால் உயிர்ச்சக்தி. உயிர்சக்தியால் இயங்கிக் கொண்டு இருப்பதனால், அது Spiritual Consciousness எனப் பெயர் பெற்றது என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்.
அதைக் காட்டிலும் நெருக்கமான நிலை (Intimate state) என்ன என்று ஊகித்து அறிவைக் கொண்டு நுண்ணிய நிலையை அறிந்து அறிந்து, அதன் பிறகு உண்மை உணர்வுக்குப் போகின்ற போது, அதுதான் எங்கும் நிறைந்ததாக உள்ள நிலை. இவ்விதமாகத் தனக்கு உள்ளாகவே தன்னை அறிந்து கொண்டு போகும் போது, அறிவானது பொருளுணர்விலிருந்து (Material Consciousness) விலகி, உயிருணர்வு (Spiritual Consciousness) பெறும். அங்கே மனிதனுடைய அறிவு முழுமை பெற்று வரும்.
மேலும் வேதாத்திரி மகரிஷி கூறும் போது யோகா என்பது வெற்றிக்கான திறவுகோல் வாழ்கையில் வெற்றி பெற மற்றும் முன்னேற நமது கண்ணோட்டம் (attitude) மிக முக்கியமானது. வெற்றி பெறுவது என்பது வாழ்கையில் அவ்வளவு சுலபம் கிடையாது . அப்படிப்பட்ட வெற்றியை சுலபமாக அடைவதற்கு தேவையான மனதின் ஆற்றல், வலிமை அடைவதற்கு உறுதுணையாக இருப்பது யோகா என்றால் யாராலும் மறுக்க முடியாது.
மனதின் ஆற்றல் எப்படி வலுப்பெறுகிறது? யோகாவின் ஒரு பகுதியான பிராணயாமம் மற்றும் தியானம் அதிமுக்கிய பங்கு வகிக்கிறது. இதனை தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி செய்து வந்தால், நம்மை பல துன்பத்திற்கு ஆளாக்கும் மன அழுத்தம் உள்ளிட்ட அனைத்தும் பறந்து சென்று விடும். நம் மனம் எப்பொழுதும் அதிக ஆற்றலுடன் செயல்படும். நம் மனம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் செயல்படும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.
பயிற்சி அவசியம்
இந்த அறிவை வைத்துக் கொண்டு எந்த விஷயத்தையும் ஆராயலாம். எதையும் நல்ல முறையில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கென ஒரு பயிற்சி வேண்டும். ஏனென்றால், இப்பொழுது நாம் ஒவ்வொரு பொருளையும் பார்த்து, அதனால் இன்பத்தை அல்லது துன்பத்தை அனுபவித்து அது வரையிலேயே எல்லை கட்டிக் கொண்டிருக்கிறோம். அதுவரையில் தான் செயல்பட முடிகிறது. அதற்கு மேல் வரமுடியவில்லை. அதைத் தாண்டிச் சிந்திக்கின்ற அளவுக்கு ஒரு பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சியைத்தான் இங்கே யோகம் என்று சொல்கிறோம். அகத்தவம் என்று சொல்கிறோம்.
அகத்தவத்தினால் என்ன பயன்?
மனத்தை உள்ளே செலுத்தி உயிர்மேலே வைக்கின்றோம். உயிர் என்றால் எங்கே இருக்கிறது, உடல் முழுவதும் இருக்கிறது. அது ஒரு நுண்ணிய துகள்களின் கூட்டம். அத்துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்று சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற போது உயிர் என்கிறோம். அதிலிருந்து வரக்கூடிய அலைதான் மனம். அதே மனதை, அந்த உயிரிலேயே செலுத்தும் போது ஒடுங்கி – உள்நோக்கி உயிரை நோக்கி நிற்கின்ற போது, மிக்க அமைதியாகவும் நுண்மையாகவும் மாறும், அந்த நிலையை Alpha Wave என்று சொல்கிறார்கள். உள்நோக்கியில்லாமல் வெளிநோக்கி நடைபெறும் போது, அதை Beta Wave என்று சொல்கிறார்கள்.
மனம் அமைதி பெற்றால் உயிராற்றலும் அமைதியாக இருக்கும். உடலில் உள்ள செல்கள் எல்லாம் அமைதி பெறும். இந்த அமைதிநிலையில் தான் உடல், மனம், உயிராற்றல் இந்த மூன்றும் ஒருங்கிணைந்து, பிணக்கின்றிச் செயல்படும். இல்லை என்றால் ஒன்றுக்கு ஒன்று ஏற்றத்தாழ்வான இயக்கம் வருகின்ற போது, அதனால் தான் மன அமைதியின்மை, உடல்நலம் பாதிப்பு போன்ற விளைவுகள் உண்டாகின்றன.
வேதாத்திரி மகரிஷி அமைத்து கொடுத்துள்ள மனவளக்கலை யோகாவினால் மனதை உள்நோக்கி நின்று பழகி இறைநிலையாகிய பேரமைதி நிலையைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கான மார்க்கத்தையே ‘அகத்தவம்’ என்று சொல்கின்றோம். இந்த அகத்தவம் என்பதை பதினான்கு வயதுக்கு மேலே உள்ள எல்லோரும் - ஆண், பெண் இருவருமே செய்யலாம். இதனால் மனம் உறுதி பெறும். நுட்பம் பெறும், கூர்மை பெறும், திடம் பெறும். உயிர் சக்தியினுடைய திண்மை அதிகரிக்கும். அதனால் உடலும் நன்றாக இருக்கும். மனமும் நன்றாக இருக்கும். எடுக்கின்ற காரியம் வெற்றியாக இருக்கும்.
PHONE: +91 7904402887 / 04253-292746