There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
உலகம் தோன்றியது முதலில் குறிஞ்சி நிலத்தில் தான். அங்கு தான் மனிதர்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். குறிஞ்சி நிலம் என்பது மலைப் பிரதேசம். முதல் முதலில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் காட்டுக்குப் போய் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்தார்கள்.
ஆண்களே எழுதிய சட்டங்களில் பெண்களுக்கு ஏது இடம்
அப்படிப் போகின்ற இடத்திற்குப் பெண்களை அழைத்துக் கொண்டு போகக் கூடாது என்பதற்காகவும், பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அன்பு, கருணை உள்ளத்தோடும் தான் பெண்களை வீட்டிலேயே வைத்தார்கள். அதன் பிறகு அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் சமுதாயச் சட்டங்களை வகுத்தார்கள். அவர்களில் ஒருவர் கூட பெண்களை சேர்த்து அவர்களோடு கலந்து பேசி சட்டங்களை எழுதியதாகத் தெரியவில்லை. ஆண்களே எழுதியதால், ‘பெண்கள் நமக்கு வேலைக்காரர்களாக இருக்கட்டும்’ என்ற கருத்தில் எல்லாச் சட்டங்களையும் எழுதிவிட்டார்கள். எந்தத் தேசத்தை எடுத்துப் பார்த்தாலும் பெண்களுக்கு சம உரிமை இல்லை.
ஆண்களுக்குச் சமமாக உள்ள பெண்கள் இரண்டாவது பிரஜையா?
இன்றைக்குப் பெண்களுடைய உயர்வு-சிறப்பு-என்ன என்பதை அறியாமல், அவர்களை இரண்டாவது பிரஜையாகவே கருதக் கூடிய அளவில் உலகம் போய்க் கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் சமமாக அன்போடும், பண்போடும் ஒருவருக்கொருவர் கணவனும், மனைவியும் நேசிக்க வேண்டும். ‘இருவருமே மனித இனம்’ என்ற மரியாதையை ஒருவருக்கொருவர் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு இருக்கக் கூடிய சிறப்பு அதிகம். உலக சமாதானத்தில்,
‘பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்
பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே’
என வேதாத்திரி மகரிஷி எழுதியுள்ளார்.
இறையாற்றலின் பெருமையைப் பாருங்கள். Sperm என்பது விந்துவிலிருக்கக் கூடிய ஒரு சிறு கிருமி. அது பெண்ணுடைய Ovum என்ற முட்டைக்குள் சென்று தான் ஒரு மனிதக் குழந்தை வரவேண்டும். நான் அப்படி வரவில்லை என்று யாரேனும் சொல்லட்டும் பார்க்கலாம். இது சிலர் அப்படியே நேராக வந்தார்கள் என்று கதையெல்லாம் எழுதுகிறார்களே. அதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற கதை.
ஒவ்வொருவரும் தோன்றியது ஜாலவித்தையால் இல்லை
எல்லாரும் பெண்ணினுடைய கருப்பை மூலமாகத் தான் வரவேண்டுமே தவிர அப்படியே ஒரு ஜாலவித்தையாக (Magician) கையிலிருந்து வரவே முடியாது. இறைவனுக்கு எல்லா ஆற்றலும் இருந்தாலும் கூட, உயிர்களை வெளியிட்டு அதை வளர்த்து வாழ வைக்கக் கூடிய பெருமையை பெண்ணிடம் தான் ஒப்படைத்திருக்கிறான்.
இறைவழிபாடு செய்யக் கூடிய நாமெல்லாம் என்ன செய்ய வேண்டும்? இறைவனுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அல்லவா? அந்த மதிப்பைப் பெண்களுக்குக் கொடுத்து அவர்கள் மனதுக்கு துன்பமில்லாது, அவர்களை மரியாதையாக வைத்திருந்தால் போதும். அதுவே இறைவழிபாடாகி விடும். ஏனெனில், படைப்பு என்ற பொறுப்பை இறைவன் பெண்களிடத்தில் கொடுத்துப் பெண்களை தன்னுடைய இடத்தில் அல்லவோ வைத்திருக்கிறான். ஆகவே பெண்களை வழிபாட்டால் அது இறைவனை வழிபடுவது போல் ஆகும் தானே?
அது வேண்டாமென்றாலும், அவர்களுடைய மனப்பான்மையை ஆண்கள் உணர வேண்டும். பிறருக்கு இட்டு உண்ண வேண்டும் என்கிற இரக்கம் பெண்களுக்கு அதிகம். ஆண்களுக்கு இரக்க உணர்வு இருந்தாலும் கூட, அது வெளிப்படுகின்ற வகையில் பணத்தை அவர்கள் வீசி எறிவார்கள். அவ்வளவு தான்.
பெண்களின் சிறப்பை பெண்களே உணர வேண்டும்
அனைவரும் மதித்து போற்றக் கூடிய அளவுக்கு பெண்களும் தங்களின் கடமையை, பொறுப்பை உணர வேண்டும். அப்பொறுப்பை உணர்கின்ற போது, அவர்களுக்கு இன்றிருக்கக்கூடிய நிலை மாறி, உயர்ந்த தெய்வீகப் பெண்மணிகளாக திகழ முடியும்.
காரணம், ‘இறைவனே என்னிடத்தில் இவ்வளவு பொறுப்பை ஒப்படைத்திருக்கிறான், இந்தப் பிள்ளைகளை நான் பெறவில்லையானாலும் சரி, என்னைப் போன்ற அன்னைகள் பெற்ற பிள்ளைகள் தான் எல்லோரும்’ என்று உணர்ந்து. அந்தக் கனிவோடு அனைவரையும் பார்க்கக்கூடிய அளவுக்குப் பெண்ணினத்திற்கு மனவிரிவு வர வேண்டும். மனிதன் திடுமென்று வாழத் தொடங்கிவிடவில்லை. கருவுற்று. பத்து மாதங்கள் அவன் அன்னை சுமந்த பிறகு தான் வெளியில் வருகிறான். கருவுறும் காலத்தில் எந்த முறையில் கருவுற்றால் அந்தக் குழந்தை நன்றாக இருக்கும் என்பது இந்தக் கால பெண்மணிகளுக்கு நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
‘என் வயிற்றில் பிறக்கக்கூடிய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். நான் அமைதியாகவும், சினம் முதலியவையெல்லாம் தவிர்த்து நல்லபடியாக இருந்தால்தான், என் குழந்தையும் நல்ல குணத்துடன் இருக்கும்’ என்ற ஒரு பொறுப்புணர்ச்சியும் அறிவு விளக்கமும் பெண்களுக்கு வந்துவிட்டதென்றால் உலகமே திருந்திவிடும்.
PHONE: +91 7904402887 / 04253-292746