மகரிஷி திருட்டை பற்றி ஒரு துறவியின் பார்வை வேததிரியம் செயல்

வேதாத்திரி மகரிஷி -அவனை மாற்றுகிறார்.

உண்மை நிகழ்ச்சி - 1980

தன் இல்லத்தில் திருட வந்த திருடனிடம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதிர்வினையாற்றிய விதம்.

பொதுவாகவே ஞானிகளின் வாழ்வில் திருடர்கள் வருவதும் , ஞானிகளால் அவர்கள் மனமாற்றமடைவதும் நிறைய நாம் படித்திருக்கிறோம்.

உதாரணமாக,

ரத்னாகர் என்ற மிகப்பெரிய திருடன்தான் நாரத முனிவரைச் சந்தித்த பின் மனமாற்றம் பெற்று வால்மீகி மகரிஷி ஆனார்.

அங்குலிமால் என்ற படு பயங்கரமான கொடூரமான திருடன் புத்தரால் மனமாற்றம் பெற்று அவருடைய முக்கிய சீடனானான்.

ஓஷோ அவர்களது வாழ்க்கையிலும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சி பற்றி நாம் படித்திருக்கிறோம்.

அந்த வரிசையில் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களால் ஒரு திருடன் மனமாற்றமடைந்து உண்மைச் சம்பவம் தான் இது.

நட்சத்திரங்கள் வைரம் போல் பிரகாசிக்க தன் அருள் வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்த ஒரு அருமையான இரவு நேரம்.பிறைச்சந்திரன் வானில் அழகாக மிதந்து கொண்டிருந்தது.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் தன்னுடைய யோக நித்திரையில் ஆழ்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

ஸ்வாமி ஜீ அவர்களுடைய மூத்த சிஷ்யர் அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.ஏதோ ஓசை கேட்கவே அவர் அந்த இருள் சூழ்ந்த வேளையில் என்ன நடக்கிறது என்று பார்க்க எழுந்து வந்தார்.

நிழல் போன்றதொரு பெரிய உருவம் அந்த வீட்டுக்குள் ஏதாவது கிடைக்குமா என்று பரபரவென்று தேடிக் கொண்டிருந்ததைக் கண்டார்.

அந்த ஆகிருதியான மனிதனுக்கு ஒரு சிறிய கடிகாரத்தைத் தவிர விலைமதிப்புள்ள பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.சடாரென்று அந்தக் கடிகாரத்தை எடுத்துக்கொண்டு அந்தத் திருடன் கதவை நோக்கி ஓடத் தொடங்கினான்.சீடர் உடனே கூச்சலிட்டார். மகரிஷி அவர்கள் விழித்துக் கொண்டார். மகரிஷி அவர்கள் திருடனைப் பார்த்து விட்டார்,திருடனும் மகரிஷியைப் பார்த்துவிட்டான்.

கத்தவில்லை, கூச்சலிட வில்லை. மிகவும் அமைதியாக, ஸ்வாமிஜி அவர்களின் கதவை நோக்கி ஓடிக்கொண்டிருந்த அந்த திருடனை உற்றுநோக்கி, "வாழ்க வளமுடன்" என்று கூறினார்.

திருடன் மிகவும் ஆச்சரியத்துடன் - கூச்சலிட்டு ,அனைவரையும் அழைப்பதற்கு பதிலாக - என்னடா இந்த மனிதர் ஏதோ சொல்கிறாரே - என்று திகைப்புடன் மகரிஷி அவர்களைத் திரும்பிப் பார்த்தான்.

சத்தம் கேட்டு வந்த அனைவரும் திருடன் ஓடி விட்டதைப் பார்த்து , ஸ்வாமிஜீயிடம் ஏன் அந்தத் திருடனைத் தடுத்து நிறுத்தவில்லை என்று கேட்டார் மகரிஷி அவர்கள் -"அந்தப் பொருள் நமக்கானது இல்லை, போகட்டும் விடுங்கள்" - என்று கூறினார்.

சில நாட்கள் கடந்தன.அந்தத் திருடன் மீண்டும் ஸ்வாமிஜீயைப் பார்க்க வந்தான்.அனைவரும் மிகுந்த திகைப்புக்குள்ளாயினர்.அடுத்து என்ன நடக்கப் போகிறதென்று மிகவும் ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அந்தத் திருடன் ஸ்வாமிஜீயைச் சந்தித்து அந்தக் கடிகாரத்தை திருப்பிக் கொடுத்தான்.

"நான் திருடப் போன இடங்களில் யாருமே என்னை வாழ்க வளமுடன் என்று இதுவரை வாழ்த்தியதே இல்லை.ஆனால் தாங்கள் மிகவும் வித்தியாசமாக என்னை வாழ்த்தினார்கள்.இது கடந்த சில நாட்களாக என்னை மிகவும் தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறது "-என்று அந்தத் திருடன் கூறினான்.பிறகு நிச்சயமாக இவர் ஒரு சாதாரணமான மனிதராக இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டு ஸ்வாமி ஜீ இடம் வாழ்த்துப் பெற வந்ததாகக் கூறினான்.

இவ்வாறாக நடந்த விஷயத்தைக் கூறிவிட்டு , தான் திருடிய கடிகாரத்தைத் திருப்பிக் கொடுத்த அந்தத் திருடன், மஹரிஷி அவர்களிடம் தன் தொழிலில் நல்ல முறையில் முன்னேறுவதற்கு ஆசீர்வாதம் பண்ணச் சொல்லிக் கேட்டான்.அங்குக் குழுமியிருந்த அனைவரும்-என்னடா இவன், திருட்டுத் தொழிலில் வெற்றிபெற ஸ்வாமிஜீ அவர்களிடமே ஆசீர்வாதம் கேட்கிறானே ,என அதிர்ந்தனர்.ஸ்வாமிஜீ என்ன சொல்லப் போகிறாரென்று மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தார்கள்.

ஸ்வாமி ஜீ தனக்கே உரித்தான அந்த வசீகரமான அன்பான புன்னகையை உதிர்த்து விட்டு -

"நீ கேட்ட விஷயத்தில் உனக்கு நான் ஆசீர்வாதம் வழங்கப் போவதில்லை; ஆனால் அதற்குப் பதிலாக நான் உனக்கு இரண்டு ரூபாய்கள் தரப் போகிறேன்.ஒரு ரூபாயை வைத்து ஏதாவது சாப்பிடு.மிச்சமுள்ள ஒரு ரூபாயைக் கொண்டு உனக்குத் தெரிந்த ஒரு தொழிலைச் செய்து நேர்மையான வழியில் சம்பாதித்து பொருளீட்டு-"என்று கூறி திருடனை வாழ்த்தி விட்டு இரண்டு ரூபாய்கள் திருடனிடம் கொடுத்தார்.

( பி.கு - அன்றைய காலகட்டத்தில் இரண்டு ரூபாய் என்பதற்கு மிகுந்த மதிப்பு இருந்தது.)

ஸ்வாமிஜியின் கருணையால் மனமாற்றமடைந்து அந்தத் திருடன் கண்டிப்பாக ஒரு நல்ல தொழில் செய்வதாக கூறி விட்டு அங்கிருந்து விடைபெற்றான்.

வாழ்த்தின் மகிமையை மிகவும் அழகாக விளக்கக் கூடிய ஒரு வாழ்க்கை நிகழ்ச்சி.

"நமது வாழ்வு மிகவும் அழகான மகிழ்ச்சிகரமான அதிர்வலைகளால் நிரம்பியுள்ளது.மிகவும் நுண்ணிய அலை வேகத்திற்கு நம் மனதைக் குவியச் செய்தோமேயானால், இயற்கை ரகசியங்களை நாம் எளிதாக உணர முடியும் -"என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்.

எந்தப் பொருளிலிருந்து ஒரு அலை வந்தாலும் , அதில் அந்தப் பொருளின் தன்மைகள் முழுவதும் அடங்கியுள்ளன.

உதாரணமாக, ஒரு ரோஜாப் பூவில் இருந்து வரக்கூடிய அலையில் அந்த மலரின் நறுமணம் முழுதும் அடங்கியுள்ளது.அதேபோல, எந்த ஒரு பொருளிலிருந்து ஒரு அலை வந்தாலும் , அந்தப் பொருளில் அடங்கியுள்ள இயந்திர, ரசாயன, காந்த, மின்சார, மற்றும் மனோதத்துவ தன்மைகள் அனைத்தும் அடங்கியிருக்கும்.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள படி வாழ்த்தின் மகிமையை உணர்ந்து அனுபவத்தில் பலன்பெற உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். உங்களைச் சூழ்ந்துள்ள நேர்மறையான ஆற்றல்களை ஈர்க்கும் காந்தமாக மாறுங்கள்.

வாழ்க வளமுடன்🙏





Join SKY Family to experience Health, Happiness & Harmony

The World Community Service Centre

Temple of Consciousness, Aliyar
Mobile Number: +91 79044 02887
Email: connect@vethathiri.ac.in




Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
SKY Yoga 2024 Privacy policy Terms of use Contact us Refund policy