There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
நிலவுலகில் தோன்றிய உயிரினங்களில் சிறப்பு வாய்ந்தவன் மனிதன். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான விலங்குகளிடத்தில் இல்லாத பெருமை ஆறறிவாக மனிதனிடத்தில் மட்டுமே உள்ளது. பகுத்தும் தொகுத்தும் பார்க்கக்கூடிய பகுத்தறிவு அவனிடம் உள்ளதால், அவனால் சிந்தனையில் சிறந்து, பண்பில் பண்பட்டு, அறிவில் ஆண்டவனை அறிந்து இன்புற முடியும். அன்பையும் அறத்தையும் கொண்டு இந்த ஆனந்த நிலையை தானும் அனுபவித்து, பிறரும் அனுபவிக்க உதவ முடியும். இறைவனோடு இணையும் சிறப்பை மனிதன் பெற்றிருந்தாலும் ஆண்டவனை அடைய முடியாமல் செய்வது அவனிடம் உள்ள ஆணவம் என்னும் தன்முனைப்புதான். தன்முனைப்பு மனிதனிடம் அழியும்போது, அவன் தன்னை, தனது ஆன்ம சொரூபத்தை அறிந்து இன்பம் அடைகிறான். ஆணவத்திரை விலகும் போது இறைவனின் திவ்ய தரிசனத்தைக் கண்டு இன்புற முடியும் என்பது மகான்களின் கூற்றாகும்.
தன்முனைப்பு என்பது இறைவனை மறந்த நிலையில், மனிதன் தனது சிறப்பிற்கெல்லாம் காரணம் தான் தானென்று எண்ணும் எண்ணம் ஆகும். தன்முனைப்பு ஆனது கர்வம், ஆணவம், செருக்கு, இறுமாப்பு என வேறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகைத் தோற்றுவித்து அதில் உயிர்களைப் படைத்து, அவற்றைக் காத்து, ஆண்டுகொண்டிருக்கும் ஆண்டவனை மறந்து, தனது அழகு, அறிவு, திறமை, புகழ், கல்வி இவற்றை நினைத்துத் தற்பெருமை கொள்வதே தன்முனைப்பாகும்.

"அறிவின் மயக்க செருக்கு தான் தன்முனைப்பாகும்.
இது ஒரு திரை போன்று அறிவின் ஒளியை மறைத்து நிற்கின்றது”
என்னும் வேதாத்திரி மகரிஷியின் கூற்றிலிருந்து தன்முனைப்பு நமது அறிவினை மறைத்து மயக்க நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் மனிதன் மயக்கம் என்னும் மாயையில் சிக்கிக்கொண்டு துன்புறுகின்றான். இந்த மாயை அவனைத் தீய செயல்களைச் செய்யத் தூண்டி, பாவப் பதிவுகளை ஏற்படுத்துகிறது என்பது புலனாகிறது. தன்முனைப்பு தகர்ந்து மனிதன் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர் நோக்கில் சித்தர்களும் மகான்களும் நன்னெறிகளை அருளியுள்ளார்கள்.
இந்த ‘தான் - தனது’ என்ற இரண்டு எண்ண எழுச்சிகள் ஒரு விநோதமான தம்பதிகள் ஆவார்கள். இவர்களுக்குப் பிறக்கின்ற அவலக் குழந்தைகள் ஆறு. அவை: பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர் – தாழ்வு மனப்பான்மை, வஞ்சம். இவற்றை முறையே நிறைமனம், பொறுமை, ஈகை, கற்பு, சமநோக்கு, மன்னிப்பு என்னும் நற்குணங்களாக மாற்றிக் கொள்வதே மனவளக்கலை.
PHONE: +91 7904402887 / 04253-292746