There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
வானத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் எது எது ஆனாலும் எப்பொழுதும் இடம் மாறிக் கொண்டு இருக்கும். ஆனால் அதற்கு ஒரு நியதி உண்டு. அந்த நியதி தவறாமல் அதனுடைய ஓட்டமானது இருக்கும். அந்த இயக்கத்தைப் 'பகுத்துணர்வு" என்ற முறையில் விஞ்ஞானிகள் தனித் தனியாகக் கணக்கிட்டு இருக்கின்றார்கள். அந்த ஓட்டத்தைத் தொகுத்துணர்வு" என்ற முறையில் தத்துவஞானிகள் யூகித்து இருக்கின்றார்கள். விஞ்ஞானிகளுடைய கணக்கு அவர்களுடைய கருத்து வரையில் சரியாக இருக்கும். மெய்ஞ்ஞானிகளுடைய கருத்து இருக்கிறதே, அது விஞ்ஞானிகளுடைய கணிப்பை ஒப்புக்கொண்டும். அதே நேரத்தில் அதில் உள்ள குறைபாட்டைப் போக்கியும் உள்ள உண்மையை உணர்த்தவல்லது.
நாம் வாழ்கின்ற இந்த உலகத்துடன் வெகுவாக சம்பந்தப்பட்டுள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும். அதனையே "கதிரவன்', "பகலவன்", "ஞாயிறு" என்றெல்லாம் குறிப் பிடுகிறோம். இந்த சூரியனைச் சுற்றி உலகத் துக்கு அருகாமையில் இருந்து காந்த அலைகளைப் பரப்பிக் கொண்டிருக்கக் கூடிய கிரகங்கள், கோள்கள் மொத்தம் ஒன்பது: ராகு, கேது இவையிரண்டையும் தவிர ஏழு. இந்த சூரியகோளம் என்பதை அசையாத ஒன்றாக நாம் எடுத்துக் கொண்டு இருக்கின்றோம். சூரியனை முதல் வட் டத்தில் சுற்றி வருவது புதன். புதனுக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 3 கோடி மைல்.
அதற்கு அடுத்தபடியாக இருப்பது சுக்கிரன்: 6 கோடி மைல் தொலைவில் உள்ளது. 1 கோடி என்றால் 100 லட்சம், மூன்றாவது வட்டத் தில் இருப்பது நம்முடைய பூ உலகம் (Earth). அது சுற்றிவரக்கூடிய பாதை சூரிய னிலிருந்து ஏறத்தாழ 9 கோடி மைல் இருக் கும். அடுத்து 14 கோடி மைல் தூரத்தில் உள்ளது தான் செவ்வாய் கிரகத்தினுடைய பாதை. அதற்கு அடுத்து குரு. இதனுடைய பாதை 48 கோடி மைல் தொலைவில் உள்ளது. கடைசியாக உள்ளது சனி. சூரியனிலிருந்து 88 கோடி மைல் தூரத்தில் அதனுடைய பாதை சுற்றிக்கொண்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்திற்கு வரும்.
அதேபோல ஒவ்வொரு கோளுக்கும் சுற்று வட்டத்தில் இவ்வளவு காலம் என்று கணக்கு உண்டு சனிக்கு 30 ஆண்டு என்றால் குருவுக்கு 12 ஆண்டு, செவ்வாய்க்கு 11/2 ஆண்டு. பூமிக்கு 1 ஆண்டு அதற்கும் கீழே இருக்கக்கூடிய சுக்கிரனுக்கு 225 நாட்கள், புதனுக்கு 55 நாட்கள். இவ்வாறு இந்த சூரியனை மையமாக வைத்துக் கொண்டு பார்க்கின்றபொழுது ஒவ்வொன்றினுடைய வேகம், சுற்றுவேகம் எந்த அளவு என்று தெரிகிறது.
இப்பொழுது ஒரு கேள்வி : சூரியனை வைத்துக் கொண்டு இத்தனை கணக்கையும் போட்டோமே; அந்த சூரியன் ஒரு அசையாத பொருளா என்று பார்க்கின்ற பொழுது தான் தத்துவ ஞானத்திற்குப் போகவேண்டி உள்ளது. சூரியனும் இடம் பெயர்ந்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அதனுடைய வேகத்தை இன்னும் கணக்கிட முடியவில்லை. ஒரு கோள் என்று இருந்தால் அதற்கு மையக்கோள் இருக்கும். சூரியனுக்கும் ஒரு மையக்கோள் உள்ளது. சூரியனுக்கு மட்டும் அல்ல. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சூரியனுக்கும் மையக்கோள் இருக்கிறது. ஆனால் அது எங்கு இருக்கிறது என்று இது வரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படிச் சுழன்று கொண்டே வரக் கூடிய ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு வேகம் உண்டு. இந்த வேகத்தை ஒட்டி இன்ன இன்ன நேரத்தில், ஒரு கோள் வந்து நிற்கும் நிற்பதே இல்லை உலவிக் கொண்டே இருப்பதை - அந்தக் கணக்கைத்தான். "வானியல்" (Astronomy) என்று சொல்கின்றோம் (The movement of the planets and its calculation is called Astronomy).
ஒவ்வொரு கோளும் பூமிக்கு அருகாமையில் வரும்பொழுது அதிலேயிருந்து வரக் கூடிய காந்த அலை இயக்கத்தினால் பூமியில் உள்ள ஜீவனுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய விளக்கங்களை "சோதிடம்" (Astrology) என்று சொல்கின்றோம். இன்ப துன்பத்தின் அடிப்படை கிரகங்களின் ஓட்டத்தைக் கணக்கிடும் முறை வானியல். அந்த ஓட்டத்தினால், அந்த சலனத்தினால், அவ்வப்பொழுது கிட்டவோ அல்லது தொலைவாகவோ போகப் போக அந்த அலையினுடைய அழுத்தம் வேறுபடும் அல்லவா, அதற்குத் தருந்தவாறு அந்த அலையில் இருந்து வந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் வேறுபடும். அதனால் ஒவ்வொரு ஜீவனுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், அந்தக் கோள்களின் மாற்றத்தினால் ரசாயன வேறுபாடு உண்டாகும்; காந்த அலை வேறுபாடு உண்டாகும். அதைக் கொண்டு உடலுக்கு நன்மை தீமை, அறிவுக்கு நன்மை தீமை இவை எல்லாம் உண்டாகும். அந்தக் கருத்தைத்தான் 'சோதிடம்" என்று கூறுவது.
PHONE: +91 7904402887 / 04253-292746