There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
‘ஞானம்’ என்ற சொல்லைக் கேட்டாலே பெருவாரியான மக்கள் ‘ஞானமா?’ அது அந்தப் பிறவியிலே நமக்கெல்லாம் கிட்டாது. அதற்கெல்லாம் பூர்வ ஜென்மத்திலே புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என்கிறார்கள். ஏன் இந்த நிலை? உண்மையில் அன்றாட வாழ்க்கையைச் சீர்படுத்திச் செம்மைப்படுத்திக் கொள்ளவே ஞானம் தேவைப்படுகிறது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
இன்ப துன்ப இயல்பறிந்து, துன்பத்தை நீக்கி, இன்ப அனுபோகத்தை அளவோடு நிறுத்திக் கொண்டு, அமைதியிலே மனதை வைத்துக் கொண்டிருக்கும் போது தான் மனிதப் பிறவியின் நோக்கமும், பயனும் எட்டப்படும்.
“ஆசையை அடியோடு விட்டுவிட வேண்டும், உலகை வெறுத்துவிட வேண்டும், துறவுகொள்ள வேண்டும், சமுதாயச் சூழலில் நாம் நடத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையை விட்டு வெளியேறிவிட வேண்டும்” என்றெல்லாம் ஒரு சில இடங்களிலே தவறாக – முரணாக எழுதப்பட்டும், கருத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்டும் வருகிறது. அதனால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஞானமானது எட்டாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் இல்லறத்தில் உள்ளவர்களுக்கும் ஞானம் என்பது கிட்டுவதற்காக எளிய முறை குண்டலினி யோகத்தை மனவளக்கலையாக நமக்கு வேதாத்திரி மகரிஷி அளித்துள்ளார்.
அறிவு வளர்ச்சி பெற்றுச் சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைக்கின்ற வரையிலே, ஐந்து புலன்களிலேயே இயங்கி நாம் எதைப் பார்க்கின்றோமா அதனுடைய பதிவு, அதிலே ஏற்படக்கூடிய இன்ப துன்ப விளைவுகள், இவற்றினுடைய பதிவுகள், அதை ஒட்டி எழும் செயல்கள், அவற்றின் பதிவுகள், என மேலும் மேலும் வினைப்பதிவுகளை ஏற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஆகையினால், மெய்ப்பொருளாக உள்ள ஆதிநிலையானது அறிவுக்குப் பிடிபடவில்லை. நாம் எங்கேயிருந்து வந்தோம். எதற்காகப் பிறந்திருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பது நினைவுக்கே வரவில்லை. இன்ப துன்பம் என்ற ஒரு சூதாட்டத்திலே நம்மைப் பற்றிய நினைப்பே எழுவதில்லை. இந்த உதவி தேவையாக இருக்கிறது.
குரு என்றால் யார்?
குரு என்றால், அவர் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இவன் ஒரு நிமிடமாகிலும் அதைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். தேடி இருக்க வேண்டும். ‘நான் பிறந்து வந்துள்ளேனே, என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே, தெரிந்து கொள்ள வேண்டுமே,’ என்று இவனாக நினைத்திருந்தால் ஒரு குரு வந்துவிடுவார்.
ஒரு மனிதனுடைய கர்மா, அவனுடைய செயல், அவனுடைய சிந்தனை, அவனுடைய தெளிவு, அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்து விடுகிறது. அதுவே குருவையும் கொண்டு வந்து சேர்த்து விடும். குரு வந்தவுடனேயாவது இவனுடைய பிரச்சனை தீர்ந்தனவா என்றால், அதுதான் இல்லை! குருவானவர் பல நியாயங்களை எடுத்துச் சொன்னாலும், இவனால் அவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள இயலுவதில்லை. மீண்டும் மீண்டும் முன்னர் செய்த மாதிரியே செய்து கொண்டு, அதையே பெரிதாக எண்ணிக் கொண்டு இருக்கின்ற பழக்கத்தினால் அந்தப் பதிவுகளிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறான்.
இன்னும் சிந்தனை உயர்ந்து ‘நான் தேர்ந்து தெளியத்தான் வேண்டும்’ என்ற அளவுக்கு அதற்கு அழுத்தம் வரும் கட்டத்திலே தான், குருவினுடைய உயிர்ச்சக்தி இவனுக்குப் பாய்ச்சப்படுகிறது. அதைத்தான் தீட்சை என்று சொல்கிறோம்.
தீட்சை என்றால் சுத்தப்படுத்துதல், பதப்படுத்துதல், முறைப்படுத்துதல். தாயும் தந்தையும் விந்து நாதத்தை வெளியேற்றிய போது, மயங்கிய நிலையிலே, உணர்ச்சி வயத்திலே, இருந்து தங்கள் உயிரை நமக்குக் கொடுத்தார்கள். அதுதான் தீட்சை எடுக்கும் முன் வரை இருந்தது. ஆனால் குருவோ, கருணையின் வடிவாய், பிரம்மஞானத்திலே தேர்ந்து தெளிந்து, ‘இந்த ஜீவன் உய்ய வேண்டும்’ என்ற எண்ணத்திலே தனது உயிர்ச்சக்தியைப் பாய்ச்சுகிறார். தொடுதல் மூலமாக, கண்பார்வை மூலமாக, நினைவின் மூலமாக அவருடைய உயிர்ச்சக்தியானது நமது உடலோடும், உயிரோடும் சேரும் போது உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயிருந்து ஆராய்ச்சிக்கு நமக்குத் திருப்பம் உண்டாகிறது.
மனிதகுல வாழ்வில் அமைதி ஓங்க ஆன்மீகம் தழைக்க வேண்டும் என்று சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள். மதம் சார்ந்த ஆன்மீகம் தழைத்துதான் இருக்கிறது. ஆனாலும் மனித வாழ்வில் அமைதி ஓங்கவில்லையே ஏன்?
உண்மைகளை அறிதற்கு உறுதுணையாயிருக்கும் கலைதான் யோகம். மெய்ப்பொருளைஅறிவதற்கான வழியை இது காட்டுகிறது. மனதின் இயல்புகளைச் சரியாகப் பார்ப்பதற்கான தெளிவினை இக்கலை கொடுத்துதவுகிறது. மனதை அளப்பதற்கு மனதே கருவியாகும். மனதை உள்முகமாகத் திருப்பவேண்டும். தேவையற்ற விவகாரங்களில் போகவிடாமல் தடுக்கவேண்டும். அதன் ஆற்றல்கள் யாவும் ஒன்று கூடும்படி செய்யவேண்டும். மனதின் இயல்பு குறித்த அறிவு வருகிறது. தன்னைத் தானேஅகத்தாய்வு செய்துகொள்ளும் ஆற்றல் பெருகுகிறது. மனிதன் பெறும் பேறுகளில் ஞானமே தலைசிறந்தது. ஞானத்தைப் பெறுவதற்கான வழி மனதை ஒருமுகப்படுத்துவதுதான். மனதைத் திரட்டி ஒருமுகப்படுத்துவது என்பதையே யோகம் விளக்குகிறது. நமது துன்பங்களை அகற்றிவிடும். அகத்தில்இருக்கும் சக்திகளை கையாளக் கற்றுக் கொள்ளும் மனிதன் இயற்கை முழுவதையும் தன்வசத்தில்கொண்டு வர முடியும். யோகம் வெறும் செவிக்கு உணவல்ல செயலுக்குரியது.
பொருள், புகழ், அதிகாரம், புலனின்ப ஆசைகளை நிறைவேற்றும் நோக்கத்தோடுதான் பக்தி ஆன்மீகம் பெருகியிருக்கிறது. இவ்வாசைகள் நிறைவேறினாலும், ஆசைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். போதும் என்ற மனநிறைவு வராது. ஆன்மாவை அறியவேண்டும் என்ற நோக்கத்தோடு தெய்வத்தைத்தேடி அடைந்தால் நினைப்பதெல்லாம் நடக்கும். நிறைவேறாத ஆசைகள் இருக்காது. மனதுக்கு நிறைவும் அமைதியும் நிலைக்கும்.
PHONE: +91 7904402887 / 04253-292746