There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
பேரியக்க மண்டலம், உயிரினங்கள், இன்ப துன்ப விளைவுகள், விருப்பம் நிறைவு போன்ற அனைத்துமே இயற்கையின் ஒரு பகுதி. இயற்கையில் எள்ளளவும் குறை இல்லை. மனித உள்ளத்தில் தேவை உணர்வு, விருப்பம் என்ற இரண்டு எண்ண எழுச்சிகள் உள்ளன. தேவை இயற்கையானது, விருப்பம் தேவையிலிருந்தும், கற்பனையிலிருந்தும் எழலாம்.
தேவை என்பது உடலையும் உயிர் வளர்ச்சியையும் ஒட்டி எழுவது. விருப்பம் தேவையிலிருந் தும் எழலாம். கற்பனையாகவும், பழக்கத்திலிருந்தும் எழலாம். தேவையை ஒட்டியதாகவே விருப் பத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டால் ஞானி. கற்பனையாகவும் பழக்கத்தை ஒட்டியும் எழும் விருப் பங்களை அப்படியே செயல்படுத்த எண்ணத்தை, உடலை இயங்க விடும் போது உனக்கு அமைந்த ஞானத்தைப் வீணணாகிறாய்.
உன் தேவையை முடிக்க முயலும் போது பிறர் தேவையும் விருப்பமும் தாக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் உனது உடலானது மிக நுட்பமாக, உனக்கு உயர் வாழ்வு அளிப்பதற்காகவே இயற்கையாய், நீண்டகாலமாகப் களாக உனது பல தலைமுறை வடிவமைக்கப்பட்டது. எந்த எண்ணம் அல்லது செயலாலும், உனது உடலில் உள்ள எந்த உறுப்பும் நலியாமலிருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.
எந்த உயிருக்கும் அதன் துன்பத்திலிருந்து விடுபட இயன்ற வழியில், அளவில் உதவி செய்து கொண்டேயிருக்க வேண்டும். இவ்வாறான கடமையில் இருந்து மனிதன் தவறும் போது மூளை செல்களின் அமைப்பும் உடல் உறுப்புக்கள், செல்கள் இவற்றின் அடுக்குகளும் சீர் குலைகின்றன. இதனால் தான் மனத்தில், உடலில் துன்பங்கள்.
இன்னல் புரிவோர். எதிரியாய் நினைப்போர் எவரேனும் இருப்பின் அவர்களும் மனம் திருந்தி, நல்வாழ்வு பெற கருணையோடு வாழ்த்துக - வேதாத்திரி மகரிஷி
உனது உடலிலே மூளையிலே ஏற்பட்டு விட்ட சீர் குலைவு வாழ்வில் பல்வேறுபட்ட குறைகளாக மலருகின்றன. இக்குறைகள் கருமூலம் உங்கள் குழந்தைகளுக்கும் தொடருகின்றன. தவமும் அறமும் ஆற்றித்தான் இந்த உடல், அணு அடுக்குகளைச் சீர் செய்ய முடியும்.
எந்தக் குறையும் உங்கள் செயலின் பதிவே என்று உணர்ந்து ஏற்றுக் கொண்டு சிந்தனையாலும் அறவழியாலும் சீர் செய்ய முயலுங்கள். உங்கள் குறை தீர்க்க நீங்கள் முயலாவிடில் வேறு யாராலும் அது முடியாது. பிறர் மூலம் உங்கள் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவே வேண்டாம்.
ஒரு விருப்பத்தில், 1.தேவையின் நீதி 2. அளவு 3. தன்மை 4. காலம் என்ற நான்கு உறுப்புகள் உள்ளன. எல்லோருடைய விருப்பமும் என் விருப்பத்தை ஒட்டியே இருக்க வேண்டும் என்று நினைப்பது மனித மனத் தின் தவறுகளில் தலையானது.
இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு பொறுமை, விட்டுக் கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும், இடம், காலம், தொடர்பு கொள்ளும் மக்கள் இவற்றிற்கேற்ப பயன்படுத்தினால் உலகையே நீ உன் வசமாக்கிக் கொள்ளலாம். பிறரிடம் திறமையை உள்ள எண்ணிப்பார்ப்பது, அவர்களோடு எவ்வாறு பழகுவது என்பதை வகுத்துக் கொள்ள உதவும். அதனை வெறுப்பு கொள்வதற்குக் காரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிறரிடம் உள்ள நல்லவைகளை நினைந்து நினைந்து பாராட்டு. நன்றி செலுத்து. இங்கு தான் உனக்கு அமைதியும் நிறைவும் உண்டாகும்.
உலகையே உன் வசமாக்க, நீ கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. இவற்றை கற்றுக்கொண்டு, உன் வாழ்க்கையில் வெற்றிபெறு
PHONE: +91 7904402887 / +91 9445905858