There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
காயம் என்பது உடல், கல்பம் என்பது உறுதி அல்லது அழியாமை. காயகல்ப யோகா என்பது உடலை உறுதிசெய்யும் யோகா என்பது பெயர்க்காரணம். இயற்கையான முறையில் உடலை மறுசீரமைக்க இப்பயிற்சி உதவுகிறது. மேலும் காயகல்பப் பயிற்சி நோய்களை குணப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது. இது முதுமையின் பல பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காக்கிறது. நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. உடலைப் பகுத்துக் கொண்டே வந்தால் செல்கள் தான் அதன் நுண்ணிய பகுதி. செல்கள் அணுக்களின் தொகுப்பு. இந்த அணுக்களில் ஒரு சுழற்சி நடைபெற்று கொண்டே இருக்கிறது. அந்த சுழற்சியின் மூலமே உடல் எங்கும் ஜீவகாந்தம் என்ற சக்தி பரவுகிறது. வயதாக வயதாக இந்த சுழற்சியின் வேகம் குறையும்.அப்போது ஜீவகாந்த உற்பத்தி குறையும். இதனால் நரம்பு மற்றும் தோல்களில் ஒரு தளர்ச்சி ஏற்படுகிறது. இதுவே வயோதிகத்திற்கு காரணமாக அமைகிறது. இந்த தளர்ச்சியை சமன்படுத்தவேண்டும். இதற்காகவே வடிவமைக்கப்பட்டது தான் காயகற்ப பயிற்சி காயகல்பம் அறிவியல் பூர்வமான ஒரு ஆன்மிக யோகப் பயிற்சி. காயகல்ப யோகம் என்ற சித்தர் பயிற்சி உயிர்சக்தியை பாதுகாப்பதில் உறுதுணைப்புரிகிறது. காயகல்ப பயிற்சியின் மூலம் மூப்பு வராது, என்றும் இளமையுடன் திகழ்வர், அதாவது கிழவனும் குமரனாவான் என்பது சித்தர்களின் சாரம்சம்.
3 Hours
Tamil
Online
Option 1:
Option 2:
வகுப்பைத் தொடர்ந்து மனவளக்கலைப் பேராசிரியர்களுடன் அன்பர்கள் இணைந்து நேரடி கலந்துரையாடல் வகுப்பு நடைபெறும்.
கருத்துக்கள்
செய்முறை